நாமக்கல் மாவட்டம் முழுவதும் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 34 பேர் கைது


நாமக்கல் மாவட்டம் முழுவதும்  350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்  34 பேர் கைது
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிர சோதனை

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 120 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 34 வழக்குகளை பதிவு செய்து உள்ள போலீசார் 34 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் நகரில் என்.கொசவம்பட்டி, நாகராஜபுரம், பட்டறைமேடு, சேலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். என்.கொசவம்பட்டி பகுதியில் ஒரு மளிகை கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட 45 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கந்துவட்டி புகாரில் 2 பேர் கைது

பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரனவீரன் தலைமையில் ‌‌‌‌‌‌வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் நேற்று பரமத்திவேலூர் சந்தைபேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா‌ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி விற்ற பரமத்திவேலூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (40), உழவர் சந்தை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (44) மற்றும் கரூர் மாவட்டம் புகளூர் ராம்நகரை சேர்ந்த சுப்ரமணியன் (56) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது 5 கந்துவட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சேகர் (வயது70), அன்பரசன் (35) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story