36 ஆடுகள் பலியிட்டு நூதன வழிபாடு


36 ஆடுகள் பலியிட்டு நூதன வழிபாடு
x

பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 36 ஆடுகள் பலியிட்டு நூதன வழிபாடு நடத்தினர்.

வேலூர்

ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு மலை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களின் முன்னோர்கள் பின்பற்றிய ஊர் கட்டுப்பாடுகளை இன்று வரை பின்பற்றி வருகின்றனர். அதன்படி, கட்டியாபட்டு மலை கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கன்னியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி 36 மண் குதிரைகளை வைத்து அதற்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒரு மண் குதிரைக்கு ஒரு ஆடு வீதம் 36 ஆடுகளை பலியிட்டு வழிபட்டனர். அதேபோல், ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட 36 மண் பானைகளில் பொங்கல் வைத்து திருமணம், குழந்தை வரம் வேண்டி தங்களின் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து கிராம மக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதில் மலை கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story