360 லிட்டர் சாராயம் பறிமுதல்
கல்வராயன்மலையில் 360 லிட்டர் சாராயம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை சிறுகளூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாகவும், சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சிறுகளூர் வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாரி டியூப்களில் விற்பனைக்காக வைத்திருந்த 360 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் பேரல்களில் சாரயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 1,800 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்த போலீசார் அவற்றை சம்பவ இடத்திலே கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் மற்றும் சாராய ஊறல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story