3,650 பொருட்கள் கண்டெடுப்பு


3,650 பொருட்கள் கண்டெடுப்பு
x

விஜயகரிசல்குளம் 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,650 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் ெதரிவித்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி

விஜயகரிசல்குளம் 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,650 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் ெதரிவித்தார்.

அகழாய்வு பணி

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் கருப்பு, வெண்மை நிறத்தில் சங்கு வளையல்கள் மற்றும் வளையல் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவிகள், மண்பாண்ட ஓடுகள் ஏராளமாக கிடைத்துள்ளன.

இதுவரை 3,650 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சியினை பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் 2-வது கட்ட அகழாய்வு இந்த மாதத்தில் நிறைவு பெற இருப்பதால் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

ஆவணப்படுத்தும் பணி

தற்போது வரை கிடைத்த பொருட்களை சுத்தம் செய்தல், கிடைத்த பொருட்களின் நீளம், அகலம், பட்டியல் தயாரிக்கும் பணிகள் என ஆவணப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நேஷனல் மிஷன் அண்ட் ஆக்டிவிட்டீஸ் இக்குழுவிற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டு அடுத்த 3-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்க அனுமதி பெற அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருகிறதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

1 More update

Next Story