விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு தொகை


விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு தொகை
x

விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதற்கான ஆணை ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதற்கான ஆணை ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடந்தது.

சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து, நிறைவேற்று மனுக்கள் மற்றும் சிறுவழக்கு உள்பட 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

வாலாஜா தாலுகா ஒழுகூர் வடமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சவுந்தரி (26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17-1-2020 அன்று மாமண்டூர்- புதூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் மோகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ரூ.37 லட்சம் இழப்பீடு தொகை

இதையடுத்து மோகனின் மனைவி சவுந்தரி ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனது குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியார் நிறுவனம் ரூ.37 லட்சம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான ஆணையை வழங்கினார்.

மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர். மக்கள் நீதிமன்றத்தில் அண்ணாதுரை, நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story