ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் கடத்தல் குறைந்து இருந்த நிலையில், மீண்டும் தங்கம் கடத்தல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வகையில் சோதனைகளை அதிகரித்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

பறிமுதல்

இதில் அவர் தனது டிக்கெட் பாக்கெட் மற்றும் மடிக்கணினியில் மறைத்து வைத்து தகடு வடிவிலும், சங்கிலி வடிவிலும் தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான 625 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story