டெங்கு காய்ச்சலுக்கு 37 பேர் மருத்துவமனைகளில் அனுமதி


டெங்கு காய்ச்சலுக்கு 37 பேர் மருத்துவமனைகளில் அனுமதி
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை

37 பேர் அனுமதி

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதே சமயம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 37 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 151 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தினந்தோறும் 2 அல்லது 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை என்றாலும், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story