280 பயனாளிகளுக்கு ரூ.38½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


280 பயனாளிகளுக்கு ரூ.38½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

கோவை அருகே நடைபெற்ற விழாவில் 280 பயனாளிகளுக்கு ரூ.38½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

கோயம்புத்தூர்


கோவை அருகே நடைபெற்ற விழாவில் 280 பயனாளிகளுக்கு ரூ.38½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வால்பாறை, மேட்டுப்பாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகளும், 8 பயனாளிகளுக்கு ரூ.38,968 செலவில் விலையில்லா சலவை எந்திரங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.4.86 லட்சத்தில் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்கள்

இதுதவிர மகளிர் சுய உதவி குழுக்கள், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உள்பட மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 51 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 24-ந் தேதி கிணத்துக்கடவு பகுதியில் மாபெரும் அரசு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் கோவை ஆர்.டி.ஓ. (தெற்கு) இளங்கோ, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலகண்ணன், மாதம்பட்டி ஊராட்சி தலைவர் முத்துராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story