சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது
கோயம்புத்தூர்
கோவை
கோவை புறநகர் போலீசாருக்கு பல்வேறு இடங்களில் மெகா சூதாட்டம் நடைப்பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வடவள்ளி போலீசார் பொங்காலியூர் பகுதியில்சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 4 பேரை கைது செய்து ரூ.2300-யை பறிமுதல் செய்தனர்.பேரூர் மத்திப்பாளையத்தில் 4 பேர், மதுக்கரை வலுக்குப்பாறையில் 4 பேர், பெரிய நாயக்கன்பாளையத்தில் 8 பேரும் கைதானார்கள். புறநகர் பகுதியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக போலீசார் 18 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7,800 பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story