அமைச்சர் காரை முற்றுகையிட முயன்ற த.மா.கா.வினர் 38 பேர் கைது


அமைச்சர் காரை முற்றுகையிட முயன்ற த.மா.கா.வினர் 38 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் காரை முற்றுகையிட முயன்ற த.மா.கா.வினர் 38 பேர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட தின விழாவையொட்டி பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பி.ஏ.பி. திட்டத்திற்கு வித்திட்டவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மரியாதை செலுத்தப்படும் தலைவர்களின் பெயர் பட்டியலில் காமராஜர், நேருவின் பெயர் குறிப்பிடப்படாமல் புறக்கணித்ததாக கூறி நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபம் முன் கோவை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் குணசேகரன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நேரு, காமராஜர் உருவப்படங்களை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காரில் அங்கு வந்தார். அவரது காரை த.மா.கா.வினர் முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 38 பேரை கைது செய்தனர். இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் கூறுகையில், பி.ஏ.பி. பாசன திட்ட விழாவில் காமராஜர், நேருவின் புகைப்படங்களுக்கும் மரியாதை செலுத்தப்படும் என்று அரசாணை வெளியிட வேண்டும். மேலும் பி.ஏ.பி. திட்ட வளாகத்தில் மற்ற தலைவர்களுக்கு சிலை வைப்பது போன்று, பி.ஏ.பி. திட்டத்திற்கு வித்திட்ட நேரு, காமராஜருக்கும் சிலை வைக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் கைதான த.மா.கா.வினரை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், நிர்வாகிகள் ரகுபதி, ஓ.கே.முருகன், ஜேம்ஸ்ராஜா, அருணாசலம், கனகராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story