38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை
சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Related Tags :
Next Story