குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 382 பேர் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 382 பேர் மனு
x

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 382 பேர் மனு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 382 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையாளர் (கலால்) ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

------------


Next Story