மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 38,420 பேர் விண்ணப்பம்


மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 38,420 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 38,420 பேர் விண்ணப்பித்து உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 38,420 பேர் விண்ணப்பித்து உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக மின்வாரியம் சார்பில் நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத் தப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் கட்டண வசூல் மையங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர பொது சேவை மையங்கள், இணைதளம் வழியாகவும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று வரை மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 38,420 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதில் 35 ஆயிரத்து 575 பேர் இணையதளம் வழியாகவும், மீதம் உள்ளவர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

இது குறித்து கோவை மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

நிராகரிப்பு

நிர்வாக காரணங்களுக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மெட்ரோ என 3 வட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 38 ஆயி ரத்து 420 பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பித்து உள்ளனர்.

இதில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்த 2,845 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இணையதளம் வழியாக விண்ணப்பித்த 2,132 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. 16,443 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட் டன. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

மின்நுகர்வோர்கள் ஆர்வம்

முதல் நாளில் மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்க மின் நுகர்வோரின் செல்போன் எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தும் (ஓ.டி.பி.) எண் அனுப்பப்பட்டு அதன்பிறகு இணைக்கப்பட்டது.

ஆனால் இன்று (நேற்று) நடைபெற்ற முகாமில் ஓ.டி.பி. எண் கேட்கப்பட வில்லை. இதனால் ஆதார் எண் இணைப்பு பணி வேகமாக நடைபெற்றது.

மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

இதனால் 2-வது நாளான நேற்று ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய அலுவலகத்திற்கு ஏராளமான மின் நுகர்வோர் தங்களது ஆதார் அட்டை நகலுடன் ஆர்வமுடன் வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story