பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன


பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் மற்றும் காவல்துறை தொடர்பான மனுக்கள் என மொத்தம் 363 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக் கொண்டார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 24 மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் அந்த மனுக்கள் தொடர்பாக தொடர்புடைய அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் 2 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு மானியமாக தலா ரூ.17 ஆயிரத்துக்கான காசோலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு சலவை பெட்டி ஆகியவற்றை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலி, முன்னோடி வங்கி மேலாளர் தியாராஜன், ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story