கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் உள்பட 39 பேர் பணியிட மாற்றம்: சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் உள்பட 39 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் செல்வகுமார், பழனிவேல், பாக்யராஜ், கலையரசி ஆகியோர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும், லட்சுமி, நிதன் தயாநிதி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், முருகன் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்துக்கும், சரவணகுமார் சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கும், வெங்கடேசன் கீழ்குப்பம் போலீஸ் நிலையதிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 7 போலீசார், திருக்கோவிலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 9 போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையங்கள் மற்றும் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பிறப்பித்துள்ளார்.