போலீஸ்காரர் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு


போலீஸ்காரர் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் வீட்டில் 39 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.ஓய்வு பெற்ற துணை சூப்பிரண்டு வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

கோயம்புத்தூர்


கோவைபுதூர்

போலீஸ்காரர் வீட்டில் 39 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.ஓய்வு பெற்ற துணை சூப்பிரண்டு வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ்காரர் வீடு

கோவையை அடுத்த கோவைபுதூரில் உள்ள எஸ்.பிளாக்கில் வசிப்பவர் ஜான்சேவியர் (வயது 46) இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி எஸ்தர், கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் கபிலா பிரேம் குமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவர் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நகை, பணம் திருட்டு

இந்த நிலையில், ஜான் சேவியரும் அவரது மனைவியும் புத்தாண்டு பிரார்த்தனைக்காக நேற்றுமுன்தினம் ஆலயத்துக்கு சென்று விட்டனர்.

கபிலா பிரேம்குமார் வெளியே சென்று இருந்தார். இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் போலீஸ்காரர் ஜான் சேவியரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள், பீரோவில் இருந்த 39 பவுன் நகை, ரூ.9 ஆயிரம் பணத்தையும் திருடி உள்ளனர்.

இதையடுத்து அந்த வீட்டின் அருகே இருந்த கபிலாபிரேம்குமார் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள், அங்கிருந்த 28 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர்.

விசாரணை

இது குறித்து போலீஸ்காரர் ஜான் சேவியர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கபிலா பிரேம்குமார் ஆகியோர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story