39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; ஆவடி கமிஷனராக அருண் நியமனம்


39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; ஆவடி கமிஷனராக அருண் நியமனம்
x

தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். ஆவடி போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்கிறார்.

சென்னை,

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1. ராஜீவ்குமார்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் தொடர்ந்து மத்திய அரசு பணியில் நீடிப்பார்.

2. சந்தீப்ராய் ரத்தோர்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் போலீஸ் பயிற்சி அகடமி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. அபய்குமார் சிங்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் லஞ்ச ஒழிப்பு இயக்குனராக தொடர்ந்து செயல்படுவார்.

4. வன்னியபெருமாள்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றுவார்.

ஆவடிக்கு புதிய கமிஷனர்

5. அருண்- சிவில் சப்ளை பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர் ஆவடி புதிய போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

6. ஆல்பர்ட் ஜான்- சென்னை பூக்கடை துணை கமிஷனராக பணியாற்றும் இவர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனார்.

7. ஸ்ரேயா குப்தா- மாநில குற்ற ஆவணக் காப்பக சூப்பிரண்டாக உள்ள இவர் சென்னை பூக்கடை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

8. சீனிவாசன்- நெல்லை நகர துணை கமிஷனராக (கிழக்கு) பணியில் உள்ள இவர் சென்னை நகர நிர்வாக பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

9. ஹர்ஷ் சிங்- சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பொறுப்பில் உள்ள இவர் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. ஜவஹர்- நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

11. சசி மோகன்- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர் சென்னை கியூ பிரிவுக்கு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

பி.சரவணன்

12. பி.சரவணன்- காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவர் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. ராஜேஷ் கண்ணன்- வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர் நாமக்கல் மாவட்டத்துக்கு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

14. கலைச்செல்வன் - நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர் மாநில குற்ற ஆவணக் காப்பக சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

15. மணிவண்ணன்- ஆவடி கமிஷனரகத்தில் செங்குன்றம் துணை கமிஷனராக பணியில் உள்ள இவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

16. சாய் பிரனீத்- மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக (தெற்கு) பணியாற்றும் இவர் செங்கல்பட்டு மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. பிரதீப்- காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர் மதுரை நகர சட்டம்-ஒழுங்கு (தெற்கு) துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

18. ஸ்ரீதேவி- திருச்சி தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன்

19. செல்வக்குமார்- தமிழ்நாடு கமாண்டோ பிரிவு சூப்பிரண்டான இவர் திருச்சி தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

20. பாலகிருஷ்ணன்- திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் ஆவடி கமிஷனரகத்தில் செங்குன்றம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. ராஜேந்திரன்- சென்னை அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

22. சாமிநாதன்- சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு (2) சூப்பிரண்டாக உள்ள இவர், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி மாற்றம் செய்யப்பட்டார்

23. சேஷாங் சாய்- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

24. அருண் பாலகோபாலன்- சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் தமிழ்நாடு கமாண்டோ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

25. எஸ்.சரவணன்- மாநில உளவுப்பிரிவு (2) சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பையும் கவனிப்பார்.

26. தீபா சத்யன்- மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டாக உள்ள இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

27. பாண்டியராஜன்- தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-வது பட்டாலியன் கமாண்டராக பணியில் உள்ள இவர் மத்தியசென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. ஜெயந்தி- மத்தியசென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு

29. சரவணக்குமார்- மாநில உளவுப்பிரிவு தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். லஞ்ச ஒழிப்பு பிரிவு தெற்கு சரக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. பொன்கார்த்திக் குமார்- கடலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு சரக சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

31. வினோத் சாந்தாராம்- காஞ்சீபுரம் தலைமையக கூடுதல் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு (1) சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

32. விஜய கார்த்திக் ராஜ்- கள்ளக்குறிச்சி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

33. கீதாஞ்லி- கரூர் மாவட்ட 'சைபர் கிரைம்' கூடுதல் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று சென்னை 'சைபர் கிரைம்' துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடசென்னை கூடுதல் கமிஷனர்

34. காமினி- தாம்பரம் கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியில் உள்ள இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

35. ராதிகா- சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

36. அன்பு- வடசென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

37. லோகநாதன்- சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் வடசென்னை கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.

சம்பத்குமார் ஓய்வு

38. நஜிமுல் ஹோடா- ஆவடி கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் மாநில நலப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில நலப்பிரிவு ஐ.ஜி. சம்பத்குமார் வருகிற 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

39. ரூபேஷ்குமார் மீனா- சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் இவர் மனித உரிமை மற்றும் சமூக நீதி ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்கிறார். இந்த பொறுப்பில் உள்ள பிராபகரன் வருகிற 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story