அய்யப்பன் கோவிலில் 39-ம் ஆண்டு விழா
கலவை அய்யப்பன் கோவிலில் 39-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
கலவை அய்யப்பன் கோவிலில் நேற்று 39-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்காக காலையில் சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அய்யப்பன் கோவிலில் உள்ள வலம்புரி விநாயகருக்கும், அய்யப்பனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் மணிகண்ட சபா சங்கத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அய்யப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அய்யப்ப பக்தர்கள் ெசண்டை மேளத்துடன் கலவை நகர வீதியில் பஜனையுடன் ஊர்வலமாக வந்தனர். இரவு 8 மணி அளவில் பொது பூஜை நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்தசாமி கலந்து கொண்டார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் பூஜை முடிந்தது. கலவை குருசுவாமி கள் தட்சிணாமூர்த்தி, விநாயகர், தாமோதரன் ஆகியோர் பூஜைகளை நடத்தினர். கலவை, ஆற்காடு, ஆரணி, செய்யார், திமிரி போன்ற பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story