பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தில் கடனுதவி வழங்கியதில் 3-ம் இடம்


பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தில் கடனுதவி வழங்கியதில் 3-ம் இடம்
x

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தில் கடனுதவி வழங்கியதில் 3-ம் இடம்

மயிலாடுதுறை

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கியதில் மயிலாடுதுறை மாவட்டம் மாநிலத்தில் 3-ம் இடத்தினை பெற்றுள்ளதாக மாவட்ட கலெக்டர் லலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கடன் உதவி

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 114 பயனாளிகளில் 176 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்தில், வங்கியிலிருந்து ரூ.3 கோடியே 61 லட்சத்து 27 ஆயிரம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 77 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 55 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 42 பயனாளிகளில் 32 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.34 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.32.லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 30 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 59 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

3-வது இடம் மயிலாடுதுறை மாவட்டம்

புதிய தொழில் முனைவோர் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 17 பயனாளிகளில் இதுவரை 13 பயனாளிகளுக்கு இதன் நிதி இலக்கீடான ரூ.1 கோடியே 68 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.4 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 7 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 33 ஆயிரம் மானியமும் வழங்கப்பட்டது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 94 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களின்கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் ஜனவரி மாதம் வரை 3-வது இடத்தினை பெற்றுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் அவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக சிறப்பாக கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் லலிதா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story