தேசிய கல்விக்கொள்கையின் 3-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி


தேசிய கல்விக்கொள்கையின் 3-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்விக்கொள்கையின் 3-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் 3-ம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ராமேசுவரத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் வேலுச்சாமி தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பேசினார். தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கையானது 10,12 முறைக்கு பதிலாக 5+3+3+4 முறையைப் பின்பற்றி பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறையில் கட்டமைப்பு மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான திறன்களையும் திறமையையும் வெளிகொணர்வதன் மூலம் உலகளாவிய அறிவாற்றலை மாணவர்கள் பெற உதவுகிறது. அதுபோல் தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விவரித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கான கல்வியியல் மாற்றம் மற்றும் பயிற்சி அடிப்படை கட்டத்திற்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு போன்ற பல கருத்துகளும் கூறப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் பகுதிகளில் செயல்படும் மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளி நிர்வாகிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story