புதன்சந்தை அருகே விவசாயியை வெட்டிய வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது


புதன்சந்தை அருகே  விவசாயியை வெட்டிய வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது
x

புதன்சந்தை அருகே விவசாயியை வெட்டிய வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது

நாமக்கல்

புதன்சந்தை அருகே கொளத்துபாளையம் சேவாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). விவசாயி. இவர் கடந்த 2-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை நிறுவனம் அருகே மர்மகும்பல் முருகேசனை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் தாலுகா அல்லிநகரம் அருகே உள்ள அழகிரிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 43), ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக் (21), மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்த பழனிசாமி (25) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதில் 2 பேர் முருகேசனை வெட்டியவர்கள் என்றும், மீதமுள்ள 2 முருகேசன் கொல்ல திட்டமிட்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே கொலை முயற்சிக்கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் கூறினர்.


Next Story