அண்ணன்-தம்பியை தாக்கிய 4 பேர் கைது


அண்ணன்-தம்பியை தாக்கிய 4 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரம் அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கீழ சிவந்திபுரம், காமராஜர் தெருவை சேர்ந்த முத்துராஜ் (வயது 44) என்பவர் நேற்று முன்தினம் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவிற்கு தனது உறவினரை அழைத்து வந்துள்ளார். அதற்கு சிவந்திபுரம், சக்திநகரை சேர்ந்த தீபக் (29), பிரசாந்த் (26), மாடக்கண்ணு (20), மேலும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் சேர்ந்து முத்துராஜ், அவருடைய அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் விழா முடிந்து முத்துராஜூம், ஜெயக்குமாரும் வீட்டிற்கு சென்றபோது, தீபக் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து இருவரையும் கல்லால் தாக்கினர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து தீபக் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தார். இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.


Next Story