11-ம் வகுப்பு மாணவரை தாக்கிய 4 பேர் கைது

நெல்லையில் 11-ம் வகுப்பு மாணவரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நெல்லை டவுன் பகுதியில் டியூசன் படித்து வருகிறார். இவரை டவுன் பகுதியை சேர்ந்த 4 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவரின் தந்தை நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டவுன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சோ்ந்து தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





