வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
சீர்காழியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சீர்காழி அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அருண் ராஜ் (வயது 24). இவர் கடந்த 22-ந்தேதி இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சீர்காழி நோக்கி சென்றுள்ளார். அப்போது பிடாரி வடக்கு வீதி என்ற இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அருண் ராஜை வழிமறித்து சரமாரியாக கம்பி, பைப்பு உள்ளிட்ட பொருட்களால் தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அருண் ராஜை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்விரோதம்
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் செந்தில்குமார் (32), சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த காளிமுத்து மகன் அசோக்குமார் (33), பிடாரி கீழ வீதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் வினோத்குமார் (32), ஈசானிய தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அருள்ராஜ் (35) ஆகியோர் அருண்ராஜை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த 4 பேரையும் சீர்காழி போலீசார் கைது செய்தனர்.