பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புன்னம்சத்திரம்- ஈரோடு சாலையில் பார் வசதியுடன் கூடிய அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த பாரில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தியை ேசர்ந்த பிச்சைக்கண்ணு (வயது 52) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த ஷேக்தாவூத் (25), பிரசாத் (22), ோகுல்நாத் (22), கிரி (22) ஆகிய 4 பேரும் பிச்சைக்கண்ணுவிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து மது கேட்டுள்ளனர். இதனால் பிச்சைக்கண்ணு சத்தம் போடவே அங்கு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் ஷேக்தாவூத் உள்பட 4 பேரும் சேர்ந்து பிச்சைக்கண்ணுவின் சட்டையில் இருந்த ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து பிச்சைக்கண்ணு கொடுத்த புகாரின்பேரில், பணத்தை பறித்து சென்ற ஷேக்தாவூத் உள்பட 4 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.