அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது
x

தாயில்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருந்திரி பறிமுதல்

தாயில்பட்டி அருகே உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் 2-வது நாளாக துரைசாமிபுரம், மீனாட்சிபுரம் விஜய ரெங்காபுரம் ஆகிய பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி ஆகியோர் சோதனை நடத்தினனர். அப்போது துரைசாமிபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த முனீஸ்வரன் (வயது 47) என்பவரிடம் இருந்து 40 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

அதேபோல சத்யராஜ் (36) என்பவரிடம் இருந்து 35 குரோஸ் கருந்திரி, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமபாண்டியன் (45) என்பவரிடம் இருந்து 40 குரோஸ் கருந்திரி, செந்தில்குமார் (42) என்பவரிடம் இருந்து 35 குரோஸ் கருந்திரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அத்துடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து 2-வது நாளாக போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Related Tags :
Next Story