கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது


கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது
x

வடலூரில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

வடலூர்,

வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ஆபத்தாரனபுரம் தனியார் திருமண மண்டபம் அருகில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வடலூர் பண்ருட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரதீப்குமார் (வயது 29), வடலூர் எம்.ஜி.ஆர்.நகர் ராஜேந்திரன் மகன் சரவணன்

(21), வடலூர் நாயுடு தெரு கலியமூர்த்தி மகன் ஜோதிமுத்து (20), வடலூர் பால்கார காலனி வில்லியம் தாஸ் மகன் விமல் பீட்டர் (22) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் அப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வடலூர் நேரு நகரை சேர்ந்த சடையன் மகன் சரவணன் என்கிற குரங்கு சரவணன் (35) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story