கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
x

நடுவீரப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

நடுவீரப்பட்டு,

நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சிலம்பிநாதன் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சி.என்.பாளையத்தை சேர்ந்த சரவணன், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், ராஜேஷ், பணிக்கன்குப்பத்தை சேர்ந்த நவீன் என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story