மணல் கடத்திய 4 பேர் கைது


மணல் கடத்திய 4 பேர் கைது
x

பந்தநல்லூர் அருகே மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின்பேரிலும், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் அறிவுரையின்பேரிலும் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், பந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல் திருட்டு, சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று பந்தநல்லூர் அருகே திட்டச்சேரி கொள்ளிடம் ஆற்றங்கரை வவ்வாதோப்பு அருகே பன்னீர் (வயது 38), மணகுண்ணத்தை சேர்ந்த சிவக்குமார் (35), பழனி (48), திட்டச்சேரியை சேர்ந்த மணிவாசகம் (22) ஆகிய 4 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் வைத்து பந்தநல்லூர் நோக்கி மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.

4 பேர் கைது

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.அதன்பேரில் அவர்கள் 4 பேர் மீதும் பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story