கள் விற்ற 4 பேர் கைது
கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெகமம்
நெகமம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், சங்கீத்குமார் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வடக்குத்தோட்டம் தோப்பில் ஆறுமுகம் (வயது 47) என்பவர் கள் இறக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆண்டிபாளையம் பகுதியில் வலுக்குப்பூட்டு தோட்டத்து சாலையில் அம்மாசையப்பன் (42) என்பவர் கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கண்ணுக்குட்டான் தோட்டத்தில் சுந்தரசாமி (58), சேரிபாளையம் கூளநாய்க்கன் தோட்டத்தில் கார்த்திகேயன் (31) ஆகியோர் கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.