கஞ்சா விற்ற 4 பேர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் கலைவாணர் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கஞ்சா விற்றதாக அதே பகுதியை சோ்ந்த சச்சின் என்ற பால்ராஜ் (வயது 22), இளங்கடையை சேர்ந்த விஷ்ணு (28) மற்றும் கோட்டாரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய செட்டிகுளத்தை சேர்ந்த பிஜூமோன் (19) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே கைது செய்யப்பட்ட பால்ராஜ் உள்பட 4 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





