கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று முன்தினம் வல்லன்குமாரன்விளை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 4 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இளங்கடையை சேர்ந்த அசோக் (வயது25), வல்லன்குமாரன்விளையை சேர்ந்த அருள் செல்வன் (30), தியாகராஜன் மற்றும் பழவிளையை சேர்ந்த ஜெனித் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story