கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் கரூர் தேக்கலை மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்று ெகாண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சசிகுமார் (வயது 29), தாமரைத்தரன் (20), வேலுச்சாமி (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (46). இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவை எடுத்து ெகாண்டு சணபிரட்டி மேலப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை வழிமறித்து ஒருவர் நிறுத்தினர். பின்னர் அவர் தான் ஒரு பையில் வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை ரவிக்குமாரிடம் விற்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்திற்கு, கஞ்சாவை விற்க முயன்ற கிருஷ்ணராயபுரம் கள்ளப்பள்ளியை சேர்ந்த ராஜா (36) என்பவரை பிடித்து கைது ெசய்தனர். ேமலும் அவரிடமிருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story