கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 1:57 PM GMT)

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசை பார்த்ததும் சில வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வட்டவிளையை சேர்ந்த முகமது தாரிக் (வயது 20), நவாஸ் (27), சூர்யா (20) மற்றும் ஆல்பன் சுகிர்தராஜ் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய ஒருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story