மளிகை கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது


மளிகை கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
x

மளிகை கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்தவர் சப்பாணி (வயது 50). இவர் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்த கூறியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. இதில் சில வாலிபர்கள் சப்பாணியை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சப்பாணி அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டித்துரை, கார்த்தி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story