ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
x

திருப்பத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள ஏரிக்கோடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தனர். அதில் மினிவேனில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினிவேனில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் போஸ்கோ நகரை சேர்ந்த சதாசிவம் (வயது 33), ஐய்யப்பன் (28), தாமலேரிமுத்தூரை சேர்ந்த 2 சிறுவர்கள் என்பதும், ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து மினிவேனை ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்தனர்.


Next Story