வாலிபரிடம் நகையை பறித்த 4 பேர் கைது
வாலிபரிடம் நகையை பறித்த 4 பேர் கைது
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை அருகே வாலிபடம் நகையை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2½ பவுன் நகை பறிப்பு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பைபாஸ் ரோடு காந்தி நகர் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (வயது 21). சம்பவத்தன்று இவர் அம்மாப்பேட்டை- பட்டுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்டி கடை முன்பு நின்று குளிர்பானம் அருந்தி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்மநபர்கள் தமிழ்ச்செல்வனை வழிமறித்து அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்து தமிழ்ச்செல்வன் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் வழக்குப்பதிவு செய்து நகைபறிப்பில் ஈடுபட்ட தஞ்சை மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரவீன் (வயது 21), தஞ்சை கீழவஸ்தாசாவடி சந்தானநகரை சேர்ந்த கார்த்திகேயன் மகன் அமர்நாத் ( 20), தஞ்சை ஜோதிநகரை சேர்ந்த பாஸ்கர் மகன் வசந்தன் ( 22), நாஞ்சிக்கோட்டை ேராடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேஷ் ( 24) ஆகிய 4 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து 2½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.