கியாஸ் அடுப்பு, சிலிண்டர் திருடிய வழக்கில் 4 பேர் கைது


கியாஸ் அடுப்பு, சிலிண்டர் திருடிய வழக்கில் 4 பேர் கைது
x

வாலாஜாவில் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுலிக். இவர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி இரவு ஓட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை ஓட்டலை திறந்தபோது, 2 கியாஸ் அடுப்புகள், ஒரு சிலிண்டர் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து சவுலிக் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை திருடியதாக ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 21), வாலாஜா அம்பேத்கர் நகரை சேர்ந்த டெல்லிராஜ் (26), பூட்டுத்தாக்கு பகுதியில் குடியிருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (20), ராஜ்குமார் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கியாஸ் அடுப்பு, சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.

மதுகுடிக்கும் பழக்கும் உடைய இவர்கள் பழைய இரும்பு பொருட்களை திருடி விற்று அந்த பணத்தில் மது அருந்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story