ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது


ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2023 1:00 AM IST (Updated: 12 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

அயோத்தியாப்பட்டணம்:-

அயோத்தியாப்பட்டணம் அருகே நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கொலை

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளப்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை விரைவில் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் எம்.எம்.-8 கோர்ட்டில் ரவுடி ஆனந்தனின் சித்தப்பா மகன் அன்பழகன் மற்றும் அஜித்குமார், மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து சென்னை புழல்சிறையில் அடைத்தனர். அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காரிப்பட்டி போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார் செய்து வருகிறார்கள்.

2 பேர் கைது

போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் ரவுடி ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக வலசையூரை சேர்ந்த சீனிவாசன் (35), வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா (36) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், உருட்டு கட்டை, 2 மோட்டார் சைக்கிள்கள் போன்றவை, பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் ஆனந்தன் மோட்டார் சைக்கிளில் வருவது குறித்த தகவலை அன்பழகன் தரப்பினருக்கு தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் வழிமறித்து வெட்டி கொலை செய்யும் போது அவர்கள் உடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைதான சீனிவாசன், ராஜா ஆகியோரை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோைவ சிறையில் அடைத்தனர்.

அண்ணன், தம்பி சிக்கினர்

மேலும் இந்த வழக்கில் காட்டூர் அருகே உள்ள வெள்ளியம்பட்டியை சேர்ந்த ஹரிசிவன் (25), அவரது தம்பி குழந்தைவேலு (23) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். ஆனந்தனை கொலை செய்த பிறகு இவர்கள் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து, அன்பழகன், மணிகண்டன், சக்திவேல், அஜித்குமார் ஆகிய 4 பேரும் தப்பிக்க உதவியாக இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story