4 சிறுவர்கள் திடீர் மாயம்


4 சிறுவர்கள் திடீர் மாயம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே 4 சிறுவர்கள் மாயமாகினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே 4 சிறுவர்கள் மாயமாகினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர்.

சிறுவர்கள்

திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் கோகுல் (வயது 17). இவர் நரிக்குடி சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களாக கோகுல், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சமத்துவபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். அப்போது சமத்துவபுரம் பகுதி சிறுவர்களுடன் அவர் பழகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடை பகுதிக்கு சென்று வருவதாக கோகுல் சென்றார். அப்போது சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஹபீஸ்(16), பிளாவடிக்குமார் மகன் அபிலேஷ் கார்த்திக்(15) மற்றும் ராஜபாண்டி மகன் அருண்பாண்டி(14) ஆகிய 3 பேரும் கோகுலுடன் கடைக்கு சென்றனர்.

விசாரணை

ஆனால் நீண்டநேரமாகியும் அவர்கள் 4 பேரும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story