கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் மேம்பாலம்


கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் மேம்பாலம்
x

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் மேம்பாலம் அமைக்க முனிரத்தினம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைப்பெரும்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. மேலும் மழை காலங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் செல்கிறது. இதனால் துரைபெரும்பாக்கம், மாகாணிபட்டு, ஆலப்பாக்கம், பன்னியூர், புதுப்பட்டு ஆகிய கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு என சென்னை, வேலூர், காஞ்சீபுரம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் மூலம் பாலம் அமைக்க ரூ.4 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்னம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மேம்பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, நெடுஞ்சாலைத் துறை உதவிகோட்ட பொறியாளர் சத்யசாய்நாதன், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முஹம்மது சையுப்தீன், வெங்கடேசன், காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், துணைத்தலைவர் தீபிகா முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஓச்சேரி பாலாஜி, ஒப்பந்ததாரர் சந்திரகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைபெரும்பாக்கம் செல்லக்கிளி, ஈராளஞ்சேரி திவ்யபாரதி தினேஷ்காந்தி, மாவட்ட கவுன்சிலர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story