4 ஓட்டல்களுக்கு அபராதம்


4 ஓட்டல்களுக்கு அபராதம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் ஆகியோர் காங்கயம், திருப்பூர் ரோடு, பழையகோட்டை சாலையில் உள்ள உணவகங்களில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 ஓட்டல்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். உணவு சம்பந்தமான குறைகளுக்கு பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.


Next Story