ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஆம்பூர் அருகே ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பொது பெட்டியில் லக்கேஜ் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் நான்கு பண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த பெட்டியில் பயணம் செய்த நபர்களிடம் இதுகுறித்து கேட்டபோது யாரும் அந்த பைக்கு உரிமை கோரவில்லை.

அதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story