விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் பேர் பார்வையிட்டனர்


விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் பேர் பார்வையிட்டனர்
x

கோடைகால சீசனையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி

ஜூன்.

கோடைகால சீசனையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

கோடை சீசன்

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறை சீசன் நாட்களில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

4 லட்சம் பேர்...

இந்தநிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசனான கடந்த 2½ மாதங்களில் விவேகானந்தர் மண்டபத்தை 4 லட்சத்து 100 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 ஆயிரத்து 690 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story