திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்


திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்
x

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.

திருச்சி

திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). இவர் வாடகைக்கார் டிரைவராக உள்ளார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த முத்துமாரி (24) என்ற பெண்ணுக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் முகநூல் மூலமே காதலித்து வந்தனர். இருவருக்கும் பெற்றோர் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் காதலுக்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முத்துமாரியை திருச்சிக்கு வரும்படி சங்கர் கூறினார்.

திருச்சிக்கு வந்த அவரை சங்கர் திருமணம் செய்துகொண்டார். கடந்த 4 மாதங்களாக கல்லுக்குழி பகுதியில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சங்கர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் அவருடைய காதல் மனைவியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. முத்துமாரியின் சொந்த ஊர் முகவரியும் சங்கருக்கு தெரியவில்லை.

இதனால் மனமுடைந்த சங்கர், மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் முத்துமாரியை தேடி வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story