வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதி


வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதி
x

வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் வந்தவாசி அடுத்த சென்னாவரம், நல்லூர், வல்லம், நெல்லியாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 4 பேர் டெங்கு பாதிப்பால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இதில் 2 பேர் உயர் சிகிச்சைக்காக சென்று விட்டனர். ஒருவர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மற்ற ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் டெங்கு பாதிப்பால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் வந்தவாசி பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். டெங்குவால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தனி வார்டு அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story