போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது


போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது
x

போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது

திருவாரூர்

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரத்தில் நாடார் தெரு காளியம்மன் கோவில் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. திருவிழாவின் பாதுகாப்புக்காக குடவாசல் போலீசார் அங்கு சென்றிருந்தனர். அப்போது நடந்த கலை நிகழ்ச்சியின் போது சிலர் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். இதனை பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் ஜெயசீலன், அவர்களை சத்தம் போடாதீர்கள் அமைதியாக உட்காருங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேங்காலிபுரத்தைச்சேர்ந்த பெரிய பணயத்தெருவை சேர்ந்த செந்தில் மகன் செந்தமிழ் செல்வன் (வயது24), ஜெயராமன் மகன் முத்துராமன்(21), கீழத்தெருவை சேர்ந்த கர்ணன் மகன் அபிஷேக் (20), முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (22) ஆகிய 4 பேர் சேர்ந்து ஜெயசீலனை தாக்கி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து குடவாசல் போலீஸ் நிலையத்தில் ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story