கூலித்தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது
கூலித்தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது
கணபதி
கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் அம்புரோஸ்(வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் கஞ்சா புகைத்தபடி இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த வழியாக வந்த பெண்கள் மீது கஞ்சா புகையை ஊதியதாக கூறப்படுகிறது. இதை கவனித்த அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ்(35), விஜய்சங்கர்(37), சந்தோஷ்குமார்(41) மற்றும் பிரவீன்குமார்(28) ஆகியோர் அம்புரோசை கண்டித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அம்புரோசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனஸ்ட்ராஜ், விஜய்சங்கர், சந்தோஷ்குமார், பிரவீன்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.