அரிவாளால் தாக்கிய 4 பேர் கைது
அம்பையில் அரிவாளால் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை இல்லத்தார் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 40). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை அதே பகுதியைச் சேர்ந்த சூசைராஜ் என்ற சுரேஷ் (39), அந்தோணிராஜ் என்ற துரை (42), ஆறுமுகம் என்ற ஆனந்த் (28), கார்த்திக் (28) ஆகியோர் கிண்டல் செய்து வந்துள்ளனர்.
கடந்த 23-ந் தேதி நான்கு பேரும் சேர்ந்து கிண்டல் செய்தனர். இதனை தட்டிக்கேட்ட ராமகிருஷ்ணனை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சூசைராஜ், அந்தோணிராஜ், ஆறுமுகம், கார்த்திக் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story