சேவல் சண்டை போட்டி நடத்திய 4 பேர் கைது


சேவல் சண்டை போட்டி நடத்திய 4 பேர் கைது
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் சூரமங்கலம் கல்யாண சுந்தரம் காலனியில் சேவல் சண்டை போட்டி நடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (வயது 30), சின்ன அம்மாபாளையத்தைச் சேர்ந்த பூபதி (44) இரும்பாலை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (30), பிரபு (30) ஆகியோர் சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 11 சேவல்களை மீட்டனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story